குளத்திலிருந்து சடலம் மீட்பு!!

மகரகம, பொரலஸ்கமுவ பிரசேத்தில் உள்ள குளத்தில் இருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சடலமொன்றைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸ் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கத்துக்கு தெரிவிக்கப்பட்ட தகவலுக்கு அமைய  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம், களுபோவில மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like