ஈரான் சபாநாயகர் தலைமையிலான குழு இலங்கைக்கு வருகிறது!!

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லாறிஜனி தலைமையிலான குழு ஒன்று இலங்கைக்கு இந்த வாரம் வருகை தரவுள்ளது.

இந்தக் குழு ஈரானின் தலைநகர் தெஹரானிலிருந்து புறப்பட்டுள்ளனர். வியட்நாமுக்கு சென்றுள்ள குழு அங்கிருந்து புறப்பட்டு நாளை மறுதினம் இலங்கைக்கு வருகை தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது இரண்டு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ,இருதரப்பு நல்லுறவு தொடர்பிலான விடயங்களை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்தப்படும் என்று ஈரானின் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

You might also like