பட்டா வாக­னம் மோதி குடும்­பத்­த­லை­வர் உயிரிழப்பு!!

உணவு வாங்­கச் சென்ற குடும்­பத் தலை­வரை பட்டா ரக வாக­னம் மோதி­ய­தில் அவர் உயி­ரி­ழந்­தார். அவ­ரு­டன் சென்ற மற்­று­மொ­ரு­வர் காய­ம­டைந்த நிலை­யில் தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். பட்டா ரக வாக­னத்­தின் சாரதி கைது செய்­யப்­பட்­டார்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று இரவு 8 மணி­ய­ள­வில் சுன்­னா­கத்­தில் நடந்­துள்­ளது. மல்­லா­கத்­தைச் சேர்ந்த 3 பிள்­ளை­க­ளின் தந்­தை­யான தர்­ம­லிங்­கம் ரமேஸ்­வ­ரன் (வயது-–41) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.

இரவு உணவு வாங்­கு­வ­தற்­கா­கச் சென்­ற­போதே ரமேஸ்­வ­ரன் விபத்­தில் சிக்­கி­னார் என்று கூறப்­ப­டு­கின்­றது. வாக­னத்­தில் சிக்­குண்டு ரமேஸ்­வ­ரன் சில மீற்­றர் தூரம் இழுத்­துச் செல்­லப்­பட்­டுள்­ளார். படு­கா­ய­ம­டைந்த அவர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­ப­ட­டார்.

எனி­னும் இரவு 10 மணி­ய­ள­வில் அவர் உயி­ரி­ழந்தார் என்று மருத்­து­வர்­கள் கூறி­னர். விபத்துடன் தொடர்­பு­டைய வாக­னத்­தின் சாரதி சுன்­னா­கம் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டார். இறப்பு தொடர்­பான விசா­ர­ணை­களை யாழ்ப்­பா­ணம் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் முன்­னெ­டுத்­தி­ருந்­தார்.

You might also like