அச்­சு­றுத்­தியே கூட்­ட­ணிக்கு ஆத­ரவளிக்க வைத்­த­னராம்!!

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நகர சபை உறுப்­பி­னர் திரு­மதி மஞ்­சுளா தர்­ம­லிங்­கத்தை, அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீ­னின் அகில இலங்கை மக்­கள் காங்­கி­ர­ஸி­னர் அச்­சு­றுத்தி – மிரட்­டியே தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணியை ஆத­ரிக்­கச் செய்­த­னர் என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் வவு­னியா மாவட்ட அமைப்­பா­ளர் கரு­ண­தாச குற்­றம் சுமத்­தி­யுள்­ளார்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டன் இணைந்தே, அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ் உள்­ளூ­ராட்­சித் தேர்­தலை வவு­னியா நகர சபை­யில் எதிர்­கொண்­டி­ருந்­தது.

ஐக்­கிய தேசி­யக் கட்சி சார்­பில் நகர சபை உறுப்­பி­ன­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்ட திரு­மதி மஞ்­சுளா தர்­ம­லிங்­கத்தை, அமைச்­சர் ரிசாட் பதி­யு­தீ­னின் சகோ­த­ரர் ரிப்­கான் பதி­யு­தீன் கடத்தி வைத்து தாம் கூறும்­படி வாக்­க­ளிக்க வேண்­டும் என்று கூறி­னார் என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் வவு­னியா மாவட்ட அமைப்­பா­ளர் குற்­றம் சுமத்­தி­னர்.

அந்­தக் குற்­றச்­சாட்டை ரிப்­கான் பதி­யு­தீன் மறுத்­துள்­ளார். திரு­மதி மஞ்­சுளா தர்­ம­லிங்­க­மும் தான் சுய­மா­கவே கூட்­டணி வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வ­ளித்­தேன் என்று குறிப்­பிட்­டார்.

You might also like