கூறிய வாக்கை காற்­றில் பறக்­க­விட்­டது முன்­னணி!!

வடக்­குப் பிர­தேச சபை­க­ளின் ஆட்சி தெற்கு அர­சி­யல் கட்­சி­க­ளின் கைக­ளுக்­குச் செல்­லும் சூழ்­நிலை ஏற்­பட்­டால், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்புக்கு ஆத­ர­வ­ளிப்­போம் என்று தெரி­வித்­தி­ருந்த தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி வவு­னியா வெண்க­லச் செட்­டிகு­ளம் பிர­தேச சபை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் கைக­ளுக்­குச் செல்­வ­தற்கு இட­ம­ளித்­துள்­ளது.

“தமி­ழர் மண்­ணில் பேரி­ன­வாத கட்­சி­கள் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்­டோம். அவ்­வா­றான சூழல் ஏதா­வது சபை­க­ளில் உரு­வா­னால் அந்த இடத்­தில் தமி­ழர்­கள் ஆட்சி அமைப்­ப­தற்கே ஆத­ர­வ­ளிப்­போம். அது ஒரு­வேளை கூட்­ட­மைப்­பாக இருந்­தா­லும் தமிழ்த் தேசத்­தின் நலன் கருதி ஆத­ர­வ­ளிப்­போம்” – என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பேச்­சா­ளர் வி.மணி­வண்­ணன் தெரி­வித்­தி­ருந்­தார்.

வவு­னியா வெங்­க­லச் செட்­டிக்­கு­ளம் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் தெரி­வின்­போது, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி ஆகிய கட்­சி­கள் போட்­டி­யிட்­டன. முதல் சுற்­றில் தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி தோல்­வி­ய­டைந்­தது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும் இடை­யி­லான போட்­டி­யின்­போது, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி நடு­நி­லமை வகித்­தது. இறு­தி­யில் ஓர் வாக்­கால், சபை­யின் தவி­சா­ளர் பதவி தெற்­குக் கட்­சி­யான சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி வசம் சென்­றது.

You might also like