வீட்டுத் திட்டப் பொறுப்பாளர்கள் கவனம் செலுத்துவார்களா?

அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப அதிகாரத்தரப்பினர்களது செயற் றிட்டத்தை வரவேற்கின்றேன். ஓலைக் குடிசைகளில் வருடக் கணக்கில் குடியிருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அறிவித்தலை எமது ஊரில் இதற்குப் பொறுப்பானவரிடம் இருந்து அறிந்தோம். ஆனால் தற்சமயம் 40 வீட்டுத்திட்டம் எனக்கூறி ஒரே இடத்தில் கட்டிக் கொடுப்போம் செயற் திட்டம் வந்திருக்கிறது.

அப்படியானால் தங்களது சொந்தக் காணியில் வசிப்போருக்கு வீட்டுத்திட்டம் இல்லையா? கடந்த காலங்களில் தனிப்பட்ட முறையில் (NERPH) வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாயி ருக்கிறது.

இதையிட்டு எமது கிராம (தலை மன்னார் ஊர்மனை) மக்கள் குடிசைகளில் வசிப்போரில் வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களது விண்ணப்பங்கள் கொழும்புக்கு அனுப்பப்பட்டிருப்பதாக எமது கிராம சேவகர் கூறுகின்றார்.
எனவே இது குறித்து உரிய அதிகாரத் தரப்பினர் கவனம் செலுத்தி ஆவன செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அல்விறெட், தலைமன்னார்

You might also like