டெளமா நகர் சிரி­யா­வி­டம்!!

சிரிய அர­சுக்கு எதி­ரான ஆயு­தக் குழு­வின் பிடி­யில் இருந்த டெளமா நக­ரைக் கைப்­பற்­றி­யுள்­ள­தாக நேற்­று­முன்­தி­னம் அறி­வித்­தது சிரியா.
சிரி­யா­வில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் உள்­நாட்­டுப் போர் இடம்­பெற்று வரு­கி­றது.

சிரி­யா­வின் பல நகர்­கள் சிரிய அர­சுக்கு எதி­ரான ஆயு­தக் குழு­வின் பிடி­யில் இருந்­தன. கடந்த வரு­டம் அலெப்போ மீட்­கப்­பட்­டது. ஏனைய இரண்டு நகர்­க­ளான டெளமா மற்­றும் மற்­றும் கவுட்­டா­வில் அண்­மைக்­கா­ல­மா­கப் போர் இடம்­பெற்று வந்­தது. இந்த நிலை­யில் டெளமா நக­ரம் நேற்­று­முன்­தி­னம் மீட்­கப்­பட்­ட­தாக சிரிய அரசு அறி­வித்­தது.

சிரி­யா­வின் கவுட்டா, டெளமா நகர்­க­ளில் கடந்த வாரம் சிரிய அரசால் நடத்­தப்­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டும் இர­சா­ய­னத் தாக்­கு­தல்­க­ளில் சுமார் 150 அப்­பா­விப் பொது­மக்­கள் உயி­ரி­ழந்­த­னர். அவர்­க­ளில் பலர் குழந்­தை­கள். இந்­தத் தாக்­கு­தலை சிரிய அரசே மேற்­கொண்­டது என்று குற்­றம்­சு­மத்­திய அமெ­ரிக்கா, பிரிட்­டன் மற்றும் பிரான்­ஸின் உத­வி­யு­டன் கடந்த சனிக்­கி­ழமை அங்கு தாக்­கு­தல்­களை நடத்­தி­யது.

இந்­தத் தாக்­கு­தல் நடத்­தப்­ப­டு­வ­தற்கு சில மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்­னள் கிளர்ச்­சிப் படை­கள் டெளமாவை விட்­டுத் தாமாக வெளி­யே­றின. அமெ­ரிக்­கா­வின் அறி­வு­றுத்­த­லின் அடிப்­ப­டை­யில் அவை வெளி­யே­றி­யி­ருக்­க­லாம் என்று கரு­தப்­ப­டு­கி­றது. கிளர்ச்­சி­யப் படை­க­ளின் தன்­னிச்­சை­யான வெளி­யேற்­றத்­தையே சிரிய அரசு வெற்­றி­யாக அறி­வித்­துள்­ளது என்று சில பன்­னாட்டு ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டன.

You might also like