கைப்­பை­யு­டன் விசா­ர­ணைக்கு வருகை தந்த மகிந்­தா­னந்த!!

என்­னைக் கைது செய்து சிறை­யில் அடைப்­பார்­கள். அதற்கு ஆயத்­த­மாக கைப்­பை­யில் உடை­க­ளைக் கொண்டு வந்­துள்­ளேன். இவ்­வாறு மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மகிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்­தார்.

நிதிக் குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு விசா­ர­ணைக்கு வாக்­கு­மூ­லம் வழங்க வந்­த­போது, ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்குக் கருத்­துத் தெரி­வித்­தார். அதன்­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

நிதி மோசடி பொலிஸ் விசா­ரணை பிரிவு என்னை விசா­ர­ணைக்கு அழைத்­துள்­ளது. நான் விளை­யாட்டு அமைச்­ச­ராக இருந்த காலத்­தில் ச.தொ.ச சிறு­வ­னம் ஊடாக 14 ஆயி­ரம் உப­க­ர­ணங்­க­ளைக் கொள்­வ­னவு செய்­வ­தற்கு முறை­யற்ற வகை­யில் பணிப்­புரை வழங்­கி­னேன் என்று என்­மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த உப­க­ர­ணங்­களை ச.தொ.ச நிறு­வ­னமே கொள்­வ­னவு செய்­தது. அதற்­கான நிதியை வழங்­கி­ய­தும் ச.தொ.ச நிறு­வ­ன­மா­கும். அந்த நிறு­வ­னமே இந்த உப­க­ர­ணங்­க­ளைப் பகிர்ந்­த­ளித்­துள்­ளது. நான் பணிப்­பு­ரையை விடுத்த­தா­கக் கூறி அரச சொத்­துக்­களை முறை­கேடு செய்த சட்­டத்­தின் கீழ் வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான வழக்­கில் வாக்கு மூலம் அளிக்­கு­மாறே எனக்கு அழைப்பு விடுக்­கப்பட்­டுள் ளது. சில சம­யம் என்னைக் கைது செய்­தால் உட­ன­டி­யாக பிணை வழங்­கு­வ­தற்கு வாய்ப்புக்­கள் இல்லை. அத­னா­லேயே மாற்று உடை­யை யும் கைப்­பை­யில் கொண்டு வந்­தி­ருக்­கின்றேன்.

ரணி­லைப் பத­வி­யி­லி­ருந்து வில­கு­மாறு ஆணை வழங்­கி­விட்­டார்­கள். அரச தலை­வர் மைத்­திரி, ரணிலை அர­சி­லி­ருந்து வில­கு­மாறு கோரு­கின்­றார். தலைமை அமைச்­சர் பதி­வி­யி­லி­ருந்தோ அல்­லது அர­சி­லி­ருந்தோ அவர் வில­கு­வ­தற்குத் தயா­ரா­க­வில்லை.

மாறாக அவ­ருக்கு நன்கு பரிச்ச­ய­மான வழி­யில் கைது­கள் செய்து சிறை­யில் அடைப்­ப­தற்கு முயற்­சி­ களை மேற்­கொண்­டுள்­ளார். எம்­மைப் போன்­ற­வர்­களைக் கைது செய்­வ­தன் ஊடாக எமது பய­ணத்­தைத் தடுத்து விட­மு­டி­யாது.

அரச சொத்­துக்­கள் சட்­டத்­தின் கீழ் இந்த விசா­ர­ணையை முன்­னெ­டுக்­கின் றனர். முத­லில் ச.தொ.ச நிறு­வ­னம் தனி­யார் நிறு­வ­னம். அங்கு இடம்­பெற்ற கொள்­வ­னவு தொடர்­பில் எவ்­வாறு அரச சொத்­துக்­கள் சட்­டத்­தின் கீழ் வழக்குப் பதிவு செய்­வது என்­பதே பெரும் கேள்­வி­யா­கும்.

அரசு தமக்கு எதி­ரா­ன­வர்­களை பழி­வாங்­கு­வ­தற்­காக இவ்­வாறு தமக்குத் தேவை­யான வகை­யில் சட்­டங்­களைப் பயன்­ப­டுத்­திக் கொள்­கின்­றது. இவற்­றைப் பார்த்து நாம் அடி­களை பின்­னால் எடுத்து வைக்­கப்­போ­வ­தில்லை. எதற்­கும் முகம்­கொ­டுக்­கத் தயா­ரா­கவே உள்­ளோம் -– என்­றார்.

You might also like