முகநூலில் குரோதத்தை தூண்ட இடமளிக்காதீர்!!

இலங்­கை­யில் மதங்­க­ளுக்கு இடையே குரோ­தங்­க­ளைப் பரப்­பு­வ­தற்கு முக­நூ­லைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்று 12 சிவில் அமைப்­புக்­கள் கோரிக்கை விடுத்­துள்­ளன.

இலங்­கையை சேர்ந்த 12 சிவில் அமைப்­புக்­கள் இது தொடர்­பில் முக­நூல் நிர்­வா­கிக்­குப் பகி­ரங்கக் கடி­த­மொன்றை எழு­தி­யுள்­ளன. இலங்­கை­யில் மதங்­க­ளுக்கு இடையே குரோ­தத்தை பரப்­பு­வ­தற்கு முக­நூல் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதை சுட்­டிக்­காட்­டி­யுள்ள சிவில் அமைப்­பு­கள் இதனைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும், சமூக தரா­த­ரங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டும் என்று வேண்­டு­கோள் விடுத்­துள்­ளன.

மதங்­க­ளுக்­கி­டை­யில் குரோ­தங்­க­ளைப் பரப்­பு­வ­தற்­கும் பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளுக்­கா­வும், முக­நூல் இலங்­கை­யில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது குறித்து தங்­கள் அமைப்பு தொடர்ச்­சி­யா­கச் சுட்­டிக்­காட்டி வரு­கின்­றது என்று மாற்­றுக்­கொள்கை நிலை­யத்தை சேர்ந்த ரைசா விக்­கி­ர­ம­துங்க தெரி­வித்­துள்­ளார்.

முக­நூல் இனக்­கு­ரோ­தங்­க­ளை­யும் பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளை­யும் தூண்­டும் பதி­வு­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பதை வர­வேற்­கின்­றோம் என­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளின் போது அனைத்து முஸ்­லிம்­க­ ளை­யும் கொலை செய்­ய­வேண்­டும் என்று தெரி­விக்­கும் பதி­வொன்று சிங்­க­ளத்­தில் முகப்­புத்­த­கத்­தில் ஆறு நாள்­கள் தொடர்ச்­சி­யாக வெளி­யா­கி­யி­ருந்­தது என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

நாங்­கள் இனக்­கு­ரோ­தம் தொடர்­பில் ஆராய்ச்­சி­செய்து அது குறித்த அறிக்­கையை முக­நூ­லுக்கு அனுப்­பி­வைத்­தோம். ஆனால் உரிய பதில்­கள் கிடைக்­க­வில்லை என­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

இனக்­கு­ரோ­தம் மற்­றும் பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை ஊக்­கு­விக்­கும் பதி­வு­கள் வெளி­யா­கி­யுள்­ளது குறித்து நாங்­கள் சுட்­டிக்­காட்­டும்­போது முக­நூல் தரப்­பி­லி­ருந்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தில்லை. இது குறித்து நாங்­கள் ஏமாற்­றம் அடைந்­துள்­ளோம் என்று அவர் குறிப்­பிட்­டார்.

You might also like