மகிந்­தா­னந்த அளுத்­க­மகே தொடர்ந்­தும் மறி­ய­லில்!!

மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மகிந்­தா­னந்த அளுத்­க­மகே, நிதிக்­குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் நேற்­றுக் காலை கைது செய்­யப்­பட்­டார். மாலை பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். இருப்­பி­னும், பிணை நிபந்­த­னை­யைப் பூர்த்தி செய்­யா­மை­யால் அவர் தொடர்ந்­தும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.

மகிந்த ராஜ­பக்ச ஆட்­சிக் காலத்­தில், அமைச்­ச­ராக இருந்த போது, 2014ஆம் ஆண்டு கரம் மற்­றும் சது­ரங்­கப் பல­கை­க­ளைக் கொள்­வ­னவு செய்­த­தில், 39 மில்­லி­யன் ரூபா ஊழல் இடம்­பெற்­ற­தாக குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

இது தொடர்­பாக வாக்­கு­மூ­லம் அளிப்­ப­தற்­காக நேற்று முற்­ப­கல் நிதிக்­குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுக்கு மகிந்­தா­னந்த அளுத்­க­மகே அழைக்­கப்­பட்­டி­ருந்­தார். விசா­ர­ணை­க­ளின் பின்­னர் அவர் கைது செய்­யப்­பட்­டார்.

கொழும்பு கோட்டை நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­டார். அவர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். கொழும்பு உயர் நீதி­மன்­றத்­தில் தன்­னு­டைய கட­வுச்­சீட்டு இருப்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும் எ​ன்ற பிணை நிபந்­த­னையை நிறை­வேற்­றாத கார­ணத்­தால் தொடர்ந்­தும் விளக்­க­ம­றி­ய­லில் உள்­ளார்.

நிதிக் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுக்கு வெளியே, கல­க­ம­டக்­கும் பொலி­ஸார், நீர்த்­தா­ரைப் பிர­யோக வாக­னங்­கள், சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் ஆகி­யோர் தயார் நிலை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­தோடு பாது­காப்­பும் பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

You might also like