காணாமல் போனவர் சடலமாக மீட்பு!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்குப் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் ஜெயராஜ் (வயது 49) என்பவர், மட்டக்களப்பு சின்ன உப்போடை வாவிக்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like