கரப்பந்துத் தொடரில் சிவகுமரன் சம்பியன்!!

கர­வெட்டி பிர­தேச இளை­ஞர் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் பெண்­கள் பிரி­வில், சிவ­கு­ம­ரன் அணி கிண்­ணம் வென்­றது.

சிவ­கு­ம­ரன் விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இறு­தி­யாட்­டம் இடம்­பெற்­றது. இதில் உடுப்­பிட்டி நவ­ஜீ­வன்ஸ் அணியை எதிர்த்து சிவ­கு­ம­ரன் அணி பலப்­ப­ரீட்சை நடத்­தி­யது.

மூன்று செற்­க­ளைக் கொண்ட ஆட்­டத்­தின் முத­லிரு செற்­க­ளை­யும் முறையே 25:23, 25:20 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி 2:0 என்ற நேர் செற் கணக்­கில் கிண்­ணம் வென்­றது சிவ­கு­ம­ரன் அணி.

You might also like