மகிந்தானந்த சற்றுமுன்னர் பிணையில் விடுவிப்பு!!

பிணை நிபந்­த­னை­யைப் பூர்த்தி செய்­யா­மை­யால் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டிருந்த முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்தகமகே சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மகிந்­தா­னந்த அளுத்­க­மகே, நிதிக்­குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் நேற்­றுக் காலை கைது செய்­யப்­பட்­டார். மாலை பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். இருப்­பி­னும், பிணை நிபந்­த­னை­யைப் பூர்த்தி செய்­யா­மை­யால் அவர் தொடர்ந்­தும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்டிருந்தார்.

அமைச்­ச­ராக இருந்த போது, 2014 ஆம் ஆண்டு 39 மில்­லி­யன் ரூபா ஊழல் இடம்­பெற்­ற­தாக அவர் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

இது தொடர்­பாக வாக்­கு­மூ­லம் அளிப்­ப­தற்­காக நேற்று முற்­ப­கல் நிதிக்­குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுக்கு மகிந்­தா­னந்த அளுத்­க­மகே அழைக்­கப்­பட்­டி­ருந்­தார். விசா­ர­ணை­க­ளின் பின்­னர் அவர் கைது செய்­யப்­பட்­டார்.

கொழும்பு கோட்டை நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­டார். அவர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். கொழும்பு உயர் நீதி­மன்­றத்­தில் தன்­னு­டைய கட­வுச்­சீட்டு இருப்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்ற பிணை நிபந்­த­னையை நிறை­வேற்­றாத கார­ணத்­தால் தொடர்ந்­தும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்கப்பட்டிருந்தார்.

You might also like