வலி.வடக்கில் அழிக்கப்படும் ராணுவத்தின் ஆயுதக்கிடங்கு!!

வலிகாமம் வடக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில், மயிலிட்டி வடக்கில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ ஆயுத கிடங்கு மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றன.

அங்கு பொருத்தப்பட்ட கூரையின் இரும்புக் கேடர்களை இராணுவத்தினர் அகற்றி வருகின்றனர். அத்துடன் ஆயுதக் கிடங்கைச் சுற்றிவர உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அணைகளும் அகற்றப்படுகின்றன.

மயிலிட்டி மக்களின் காணிகள் விடுவிக்கக்கூடாது அங்கு இராணுவத்தினரின் ஆயுதக் களஞ்சியம் உள்ளது என்று தேசிய போர் வீரர்கள் முன்னணி அமைப்பு 2016 இல் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியிருந்தது.

எனினும் இதனை அரச தலைவர் மறுத்ததுடன் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like