பூநகரி பிரதேச செயலகம் சம்பியனானது!!

கிளி­நொச்சி மாவட்டப் பிர­தேச செய­லக பிரி­வுக்­குட்­பட்ட பதிவு செய்­யப்­பட்ட கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில், பூந­கரி பிர­தேச செய­லக அணி கிண்­ணம் வென்­றது.

உத­ய­தா­ரகை விளை­யாட் டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் கரைச்சி பிர­தேச செய­லக அணியை எதிர்த்து பூந­கரி பிர­தேச செய­லக அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய கரைச்சி பிர­தேச செய­லக அணி நிர்­ண­யிக் கப்­பட்ட 10 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் நிறை­வில் 5 இலக்­கு­களை இழந்து 44 ஓட்­டங்க­ளைப் பெற்­றது. தர்­சன் அதி­க­பட்­ச­மாக 16 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய பூந­கரி பிர­தேச செய­லக அணி 8.5 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 5 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்­றது.

You might also like