வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு!!

தன்சானியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் தலைநகரமான டார் ஏஸ் சலாம் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. அங்குள்ள வீடுகளிலும், வீதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாள்ளாக பெய்த கனமழையில் நகரில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் வீடுகளின் மேற்கூரையில் தங்கியுள்ளனர் என்று மீட்புப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மழை தொடரும் என்பதால் பொதுமக்கள் மீட்கப்பட்டு
பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like