பேருந்தை  இடைமறித்து  தீ வைப்பு!!

கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில்  புணானை காட்டுப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்துக்கு  தீ வைக்கப்பட்டுள்ளது.

புணானை பொலிஸ் சாவடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டுப்பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலொன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தை வழி மறித்து  இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து சென்ற  நால்வர், பேருந்துக்குத் தீ வைத்து விட்டு தப்பிச் சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

பேருந்தில் பயணித்த சாரதி மற்றும் உதவியாளர் சிறிய காயங்களுடன் வாழைச்சேனை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like