இளை­ஞர் தேசிய விரு­தில் சண்­டி­லிப்­பாய் பிர­தேச செய­ல­கம் முத­லி­டம்!!

‘ துருணு சிர­ம­சக்கி ’’ திற­மை­மிக்க இளை­ஞர் தேசிய விரு­தில் மாவட்ட ரீதி­யில் சண்­டி­லிப்­பாய் பிர­தேச செய­ல­கம் முத­லாம் இடத்­தைப் பெற்­றுள்­ளது.

தேசிய இளை­ஞர் சேவை மன்­றத்­தி­ன­ரால் நாடு முழு­வ­தும் முன்­னெ­டுக்­கப்­பட்ட கிரா­மத்­திற்கு ஒரு­கோடி மக்­கள் கருத்­திட்ட மதிப்­பீட்­டில் ( ‘‘ துருணு சிர­ம­சக்கி ’’ ) சண்­டி­லிப்­பாய் பிர­தேச செய­ல­கத்­தின் சுது­மலை வடக்கு இளை­ஞர் கழ­கம் இளை­ஞர் மையத்தை நிறுவி மாவட்ட ரீதி­யில் முத­லா­மி­டத்தை பெற்­றுக்­கொண்­டது.

அலரி மாளி­கை­யில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் நடை­பெற்ற தேசிய விருது வழங்­கும் நிகழ்­வில் சண்­டி­லிப்­பாய் பிர­தேச செய­லர் உ. யசோதா அவர்­க­ளுக்கு வெற்­றி­க் கே­ட­ய­மும் சுது­மலை வடக்கு இளை­ஞர் கழ­கத்­திற்கு 5 இலட்­சம் ரூபா பெறு­ம­தி­யான காசோ­லை­யும் இந்த நிகழ்வை நெறிப்­ப­டுத்­தி­ய­மைக்­காக இளை­ஞர் சேவை அதி­காரி லோக­நா­தன். றஜீ­ப­னுக்கு சான்­றி­த­ழும் வழங்கி மதிப்­ப­ளிக்­கப்­பட்­டது.

You might also like