இறப்பைத் தள்ளி வைக்க மருந்து கண்டு பிடிப்பு

சாவின் விளிம்பில் உள்ளவரையும் உயிர் பிழைக்க வைத்து, அந்த சாவைத் தள்ளிப்போடும் மருந்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இம் மருந்தின் மூலம் சாவின் விளிம்பில் உள்ள ஒரு நபரை சுற்றியுள்ளவர்களிடம் 4 மணிநேரம் பேச வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

மரணத் தருவாயில் இருக்கும் நோயாளிகளை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு வகையான தூக்கமின்மை மருந்து உதவுகிறது. சோல்பிடிம் என்ற மருந்து, மரணத் தருவாயில் உள்ள மனிதர்களின் உடலில் பல்வேறு நிலைகளில் பல்வேறு வியக்க வைக்கும் விளைவுகளை ஏற்படுத்துவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மிச்சிகன் பல்கலைக்கழக வல்லுனர்கள் கோமா, பார்கின்சன் நோய், பக்கவாதம் மற்றும் அதிர்ச்சிகரமான மூளை காயங்கள் அனுபவித்தவர்கள் உள்பட 20 நரம்பியல் பிரச்சினை உள்ளவர்களிடம் இம் மருந்து எவ்வாறு வேலை செய்கிறது என ஆய்வு நடத்தினர். இதில் மருந்து கொடுக்கப்பட்டதன் பின்னர் அவர்களின் உடல் நிலை மேம்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வு குறித்து பீட்டர்சன் என்ற நரம்பியல் நிபுணர் கூறும் போது, சோல்பிடிம் மருந்து கொடுத்த பிறகு குறைந்தபட்ச உணர்வுள்ள நிலைக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். அங்கு அவர்கள் சுற்றியுள்ளவர்களுடன் பேச முயற்சித்தாக அவர் கூறினார்.

You might also like