கிளிநொச்சி செய்திகள்

அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸாரால் தடை!

கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் அமைக்கப்பட்ட அக்கராஜ மன்னனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மன்னரை நினைவு கூரும் நிகழ்வொன்று இன்று கரைச்சி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வினை இன்று நடாத்துவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸாருடன் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டடிருந்தனர். எனினும் இன்று கரும்புலிகள் நாள் என்பதால் நிகழ்வை நடாத்த முடியாது என தெரிவிக்கப்பட்டதை அடுத்து நிகழ்வு இடம்பெறவில்லை.

13ம் நூற்றாண்டில் பொலநறுவை இராசதானிக்கு பின்னர் வன்னி நிலம் தமிழ் அரசர்களால் ஆளப்பட்டது. அத்தகைய அரசர்களில் ஒருவரே அக்கராஜ மன்னன். அவரது ஆட்சிக்குள்ளான பிரதேசத்தில் ஒன்றே அக்கராயன் என இன்று அழைக்கப்பட்டு வருகின்றது.

அந்த மன்னனின் நினைவாக அப்பிரதேசத்தில் 05.07.2018 அன்று குறித்த சிலை திறந்து வைக்கப்பட்டிருந்தது. அந்த நாளை நினைவு கூரும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதே தடை விதிக்கப்பட்டது.

Related posts

வீதியனுமதிப் பத்திரமின்றி பயணித்த சொகுசு பஸ்கள்

Tharani

16 வயதில் ஹட்ரிக் சாதனை!

Tharani

ஆறுமுகத்தின் இழப்பு ஆழ்ந்த அதிர்ச்சியை தந்துள்ளது – கோபால்

G. Pragas