செய்திகள்

அசிதிசி ஊடக புலமைப்பரிசில் செயற்றிட்டத்துக்கான விண்ணப்பம் கோரல்

இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும் வருடாந்த வெகுஜன ஊடக உதவித்தொகை திட்டத்தை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சு செயல்படுத்தவுள்ளது.

”அசிதிசி ஊடக புலமைப்பரிசில் செயற்றிட்டம் – 2020” க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2020 பெப்ரவரி 07 ஆம் திகதி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி ஆகும்.

இலங்கையின் அங்கீகாரம் பெற்ற இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் முழுநேர அல்லது பகுதி நேர அடிப்படையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள், இணையத்தள ஊடகவியலாளர்கள் இந்தப் புலமைப் பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ண்ப்பத்தாரர் மூன்று ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த 18 முதல் 55 வயதுக்குட்பட்ட ஊடகவியலாளராக இருத்தல் வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் ஊடகவியலாளர்களுக்கான அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டையைப் பெற்றிருத்தல் வேண்டும்.

கற்கை நெறியின் பொருட்டு வழங்கப்படும்  பட்டதாரி மற்றும் பட்டப் பின்படிப்புக்கான உதவித்தொகை திட்டம் அதிகபட்சமாக ரூ. 200,000 மற்றும் நீண்ட கால மற்றும் குறுகிய கால சான்றிதழ் கற்கை நெறிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 100,000 வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பங்களை பதிவுத் தபால் மூலம் பணிப்பாளர் (ஊடகங்கள்), தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சு, 163, கிருளப்பனை மாவத்த, பொல்ஹேன்கொட, கொழும்பு-05 அனுப்பப்பட வேண்டும்.

”அசிதிசி ஊடக புலமைப்பரிசில் செயற்றிட்டம் – 2020” பற்றிய மேலதிக தகவல்களை 0112513645/0112513459/0112513460 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது (https://www.media.gov.lk) வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமோ பெற்றுக் கொள்ளமுடியும்.

விண்ணப்பப் படிவம் மற்றும் விபரங்கள் பின்வருமாறு:

Related posts

சார்வாரி புதுவருடப் பிறப்பும் சுப நேரங்களும்!

Bavan

155 குடும்பங்களுக்கு உலருணவு வழங்கல்

reka sivalingam

ஐதேகவில் ரஞ்சனை போன்றே இன்னும் மூவர் நீக்கம்?

reka sivalingam