in ,

அச்சுவேலி சந்தையில் பரவியது கொரோனா!! – பஸ் நடத்துநர் மனைவி, மகனுக்கும் தொற்று!!

அச்சுவேலி சந்தை வியாபாரிகள் நால்வருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே அவர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோரை இனங்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பஸ் நடத்துநரின் மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கும் இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஈஸ்டர் பயங்கரவாதம்; ஜ.ஆ.கு அறிக்கையின் பிரதியை கோரிய சட்டமா அதிபர்

வடக்கில் இன்று மொத்தம் 10 பேருக்கு உறுதி!