செய்திகள் பிரதான செய்தி

அஜித்தின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியர் இலங்கை பொலிஸில் வாக்குமூலம் வழங்க வேண்டும் என்று கோரி முன்னாள் இராணுவ மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன சுவிஸ் தூதரகம் முன் இன்று (02) காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் அத்துரலிய ரத்ன தேரர் எம்பி மற்றும் முன்னாள் இராணுவ அட்மிரல் சரத் வீரசேகரவின் தலையீட்டை அடுத்து அவர் தனது உண்ணாவிரத்ததை கைவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் கடத்தல் தொடர்பில் சுவிஸ் தூதரகம் வழங்கிய தகவல் கடத்தப்பட்டவரின் உண்மையான நடவடிக்கையுடன் ஒத்துப்போகவில்லை. அவரை சட்ட அமுலாக்க அதிகாரிகள் நேர்காணல் செய்ய வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே அஜித் பிரசன்ன போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இவர் கடந்த காலத்தில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் சந்தேக நபர்களின் சட்டத்தரணியாக இருந்து விசாரணை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் தரப்புச் சட்டத்தரணிகளை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டார். அண்மையில் நாட்டை விட்டு வெளியேறிய சிஐடி நிசாந்த சில்வாவை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி ஊடகப்பிரிவு பணிப்பாளராக சமரநாயக்க

reka sivalingam

கொலைக் குற்றவாளிகளை 12 மணி நேரத்தில் கைது செய்த பொலிஸார்

G. Pragas

சுஜித் நிலைமை வராமலிருக்க பெற்றோர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

G. Pragas