சினிமா செய்திகள்

அஜித்துக்கும் ஷாலினிக்கும் வேண்டுகோள் விடுத்தார் கஸ்தூரி!

கடந்த இரண்டு நாட்களாக அஜித் ரசிகர்களுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் இடையே டுவிட்டர் இணையதளத்தில் கடுமையான வார்த்தைப் போர் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. இதில் ஆபாசமான வார்த்தைகளால் சமூக வலைத்தள பயனாளிகள் கஸ்தூரியை திட்ட, அதற்கு கஸ்தூரியும் பதிலடி கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் இது குறித்து தற்போது மேலும் அவர் பதிவு செய்துள்ள ஒரு டுவிட்டில் நேற்று முதல் நடைபெற்று வரும் பிரச்சினையில் எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அதேபோல் பெண்களை மதிக்கத் தெரிந்த அனைவருக்கும் எனது நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் அஜித் குமார் மற்றும் ஷாலினி அவர்கள் தலையிட்டு ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்பவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related posts

கொழும்பில் விபத்து; ஒருவர் பலி!

reka sivalingam

ரணிலுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி கோரல்

G. Pragas

தஞ்சைப் பெரிய காேவில் குடமுழுக்கு; தமிழில் இல்லை!

Bavan

Leave a Comment