சினிமா செய்திகள்

அஜித் புதிய படம் பற்றி புதுத் தகவல்

அஜித் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. பாலிவுட்டில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் இது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து, அஜித்தின் 60 படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இது அஜித்தின் 60-வது படமாகும். இந்நிலையில், ‘தல 60’ படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் அஜித் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து படக்குழுவிடம் விசாரித்தபோது,ெ
“அது பழைய புகைப்படம். இன்னும் போட்டோஷூட் கூட நடத்தவில்லை. அதற்குள் எப்படி படப்பிடிப்பைத் தொடங்க முடியும்? அஜித்துடன் நடிப்பவர்கள் தேர்வு தற்போதுதான் நடைபெற்று வருகிறது.

அது முடிந்ததும், பட பூஜையன்று படக்குழுவினர் யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளோம்” என்றனர். ‘தல 60’ படத்துக்காக தாடி, மீசையை எடுத்து விட்டு இளமைத் தோற்றத்துக்கு மாறியுள்ளார் அஜித். ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்த படமாக இது உருவாகவுள்ளது.

Related posts

ஹூல் மற்றும் அவரது புதல்வியின் செயற்பாட்டிற்கு கண்டனம்!

Tharani

மஹிந்தவிடம் மகஜர் கையளித்த கோடீஸ்வரன்

G. Pragas

மத்திய வங்கி மோசடி விசாரணை பயனற்றது – வாசு

G. Pragas