செய்திகள் பிந்திய செய்திகள் வவுனியா

அடாவடியாக செயற்பட்ட மின்சார சபை; மறியல் செய்து 50 கிராமங்கள் மின் ஔி பெற்றன

வவுனியா – ஆச்சிபுரத்தில் கடந்த (04) மின்சார நிலுவை உள்ள வீடு ஒன்றில் மின் இணைப்பை துண்டித்த போது ஏற்பட்ட முரண்பாடு தாக்குதலாக மாறியதில் ஆறு மின்சார சபை ஊழியர்கள் காயமடைந்திருந்தனர். இதனையடுத்து பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

எனினும் வவுனியாவின் 50 கிராமங்களில் மின்சாரத்தை துண்டித்து வவுனியா மின்சார சபையினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் மின்சாரத்தை வழங்க கோரி சில கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் நேற்று முன் தினம் இரவு வீதிகளை மறித்து, ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை தொடர்ந்து பொலிஸாரின் நடவடிக்கையால் பல கிராமங்களுக்கு மீள மின்சாரம் வழங்கப்பட்டதுடன், ஏனைய கிராமங்களுக்கு காலையில் மின்சாரம் வழங்கப்படும் என்று பொலிஸார் வாக்குறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related posts

அரச நிதி மோசடி; விடுதலை பெற்றார் கெஹெலிய!

G. Pragas

தலைவராக சாதனை படைத்த கோஹ்லி

G. Pragas

இருவர் வெளியே ஒருவர் உள்ளே; இப்பாேது கொரோனா நிலைவரம்

G. Pragas