செய்திகள்

அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக் கோரி போராட்டம்!

நுவரெலியா – சாமிமலை ஸ்டொக்கம் தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் ஸ்டொக்கம் தோட்டத்தின் தொழிற்சாலைக்கு முன்பாக இன்று (02) இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

தோட்டங்கள் காடாகி காட்சியளிக்கின்றன, தொழிற்சாலை ஒழுங்கான முறையில் இயங்குவதில்லை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கும் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மறுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். மேலும் மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related posts

தாழிறக்கம் காரணமாக டிக்மன் வீதிக்கு தடை

Tharani

வாகன விபத்தில் நான்கு பெண்கள் பலி!

Bavan

கூட்டமைப்பின் தலைவரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி

கதிர்

Leave a Comment