செய்திகள் பிரதான செய்தி

அடியாட்களை வைத்து ஆட்சி செய்ய முடியாது! – சஜித்

அடியாட்களை வைத்து நாட்டை நிர்வகிக்க முடியாது. மக்கள் மத்தியில் சென்று மனங்களை வென்று சேவையாற்றும் திறமை எனக்கு உள்ளது என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (12) கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

உலகில் சிறந்த நாடாக இலங்கையை உருவாக்க வாக்குறுதியளிக்கிறேன். அடியாட்களையும் உதவியாட்களையும் வைத்து நாட்டை நிர்வகிக்க முடியாது. மக்கள் மத்தியில் சென்று அவர்களின் மனங்களை வென்று சேவையாற்றும் திறமை எனக்கு உள்ளது.

நாட்டை இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வருவதா அல்லது சிநேகப்பூர்வ நாட்டினை உருவாக்குவதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் – என்றார்.

Related posts

காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பிறகு பாடசாலைகள் திறப்பு

reka sivalingam

வெள்ளைப் பூண்டு விலை அதிகரிப்பு!

reka sivalingam

நாணயத்தாள்களுடன் சிறுவன் உட்பட இருவர் கைது!

G. Pragas