செய்திகள்

அடுத்த மூன்று மாதங்களில் மற்றொரு கொரோனா அலை

சில அமைச்சர்களின் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த மூன்று மாதங்களில் மீண்டும் ஒரு கொரோனா அலை உருவாகலாம் என்று சுகாதாரத் தொழிற்துறையினரின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் தெரிவிக்கையில்,
பெருமளவு சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்குள் அனுமதிப்பது ஆபத்தான விடயம். கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் பயன் ஆறு மாதங்களுக்கு மாத்திரம் நீடிக்கும் என்று ரஷ்ய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் ஒவ்வொரு வகையும் தடுப்பூசிக்கு ஒவ்வொரு வகையான விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களால் ஏனையவர்களுக்கு நோய் தொற்றுவதைத் தடுக்க முடியாது.
கொரோனாத் தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்கு ஒரு தற்காலிக ஓய்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சில சுகாதார அதிகாரிகள் பலவந்தமாக பி.சி.ஆர் சோதனைகளை நிறுத்தி, வலுக்கட்டாயமாக கொரோனா அலைகளை உருவாக்கினர்.
நாடு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், அனைவரும் மிகவும் சுகாதார முறைகளுடன் செயற்பட்டால் மட்டுமே, புதிய அலை உருவாகுவதைத் தடுக்க முடியும். இதன் முதல்கட்டமாக, இடைநிறுத்தப்பட்ட பி.சி.ஆர். சோதனை செயல்முறையை மீண்டும் தொடங்க வேண்டும் .- என்றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266