செய்திகள் பிரதான செய்தி

அட்மிரல் ரவீந்திர “என்னை படுகொலை செய்ய முயன்றார்” நிசாங்க குற்றச்சாட்டு!

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தன்னை படுகொலை செய்ய முயன்றதாக அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஆணைக்குழுவில் நேற்று (01) முன்னிலையாகி சாட்சியம் வழங்கிய போதே அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும்,

‘2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி ரவீந்திர குணவர்த்தன என்னை கொலை செய்ய இரு கடற்படை வீரர்களை 9 எம்எம் துப்பாக்கிகளுடன் கோட்டையில் உள்ள எனது வீட்டுக்கு அனுப்பினார்.

இதன்போது சட்டரீதியாக ஆயுதம் தரித்த பாதுகாப்பு அதிகாரிகள் இருந்ததால் தப்பித்துக் கொண்டேன்.’ – என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மூன்றாமவரும் குணமடைந்தார்!

G. Pragas

கொரோனா தொற்றிய முதல் இலங்கையர் குணமடைந்தார்!

G. Pragas

மீனவர்களுக்காக அமைக்கப்பட்ட பாதை அகற்றம்…!

Tharani