கழுத்துப்பட்டியை அணியத் தவறியதால் நியூஸிலாந்தின் மயோரி (Maori) கட்சியின் தலைவர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் இடம்பெறும் விவாதங்களின் போது, வினா எழுப்பும் ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கழுத்துப்பட்டியை அணிந்திருப்பது கட்டாயமாகும்.
இந்நிலையில், கழுத்துப்பட்டியை அணியாது நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த மயோரி கட்சியின் தலைவர் ரிவிரி வய்த்திதி இரு தடவைகள் வினா எழுப்புவதற்கு முயற்சித்த போதிலும் சபாநாயகர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அமர்விலிருந்து வௌியேறுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.