செய்திகள் விளையாட்டு

அணி மாறுகிறார் அஸ்வின்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக7.6 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். கடந்த இரு சீசனில் அந்த அணியின் கப்டனாக செயல்பட்டார். தொடக்ககட்ட ஆட்டங்களில் வென்றாலும் கடைசிக் கட்டத்தில் சொதப்பியதால் இரண்டு முறையும் பஞ்சாப் அணியால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது. அஸ்வின் தலைமையில் பஞ்சாப் அணி 28 ஆட்டங்களில் விளையாடி 12-ல் வெற்றியும், 16-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. சமீபத்தில் பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளரை அதிரடியாக நீக்கிய பஞ்சாப் அணி நிர்வாகம், புதிய கப்டனுடன் 2020-ம் ஆண்டு தொடரை எதிர்கொள்ள விரும்புவதாகவும் கூறியது.

இந்த நிலையில் அஸ்வின், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறுகிறார். இது தொடர்பாக இரு அணி நிர்வாகத்துக்கு இடையிலான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. அஸ்வின், டெல்லி அணியுடன் இணைவதால் பஞ்சாப் அணியை லோகேஷ் ராகுல் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மருந்து வழங்குநரின் இடமாற்றத்தை கண்டித்து போராட்டம்

G. Pragas

2015 வரை எம தர்மராஜ ஆட்சி நடந்தது; எமதூதுவர் கோத்தா

G. Pragas

எவரையும் ஆதரிக்க முடியாது – மறத்தமிழர் கட்சி

G. Pragas

Leave a Comment