செய்திகள்

அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்களை தண்டிக்க வேண்டும்

எவராவது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி சட்டத்தை மீறியிருந்தால், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என சுற்றாடல்  இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தவறு செய்தவர்களைத் தண்டிக்கத் தவறினால், நீதித்துறையின் சுதந்திரம் குறித்த பொதுமக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்றும் அத்தோடு கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எவ்வளவு முறை சட்டம் மீறப்பட்டது என்றும் ஜனநாயகம் குறைமதிப்பிற்கு உட்பட்டது என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், அண்மையில் ஊடகங்களில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி பதிவுகள் மூலம் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், எனவே சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களும் அவர்களது பதவிகளை பொருட்படுத்தாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related posts

பிரேமதாச ஆட்சியில் பல துன்பியல் நிகழ்வுகள் தமிழருக்கு ஏற்படுத்தப்பட்டது

G. Pragas

மாணவர்கள் நால்வரின் மரணம் குறித்து விசாரிக்க குழு!

G. Pragas

யாழ் அபிவிருத்தியில் அரசியல் இலாபம் தேடும் அரசியல்வாதிகள்

Tharani

Leave a Comment