கிழக்கு மாகாணம் செய்திகள்

அதிக விலைக்கு இறைச்சி விற்பனை செய்தால் முறையிடவும்!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி இறைச்சிகளை விற்பனை செய்த எட்டு வியாபாரிகளுக்கு எதிராக இன்று (22) சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் மீராவோடை போன்ற பகுதிகளில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களால் நுகர்வோர் அதிகார சபைக்கு வழங்கப்பட்ட பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக நடைபெற்ற விசாரணைகளின் போதே எட்டு வியாபாரிகளுக்கு எதிராக வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி ஒரு கிலோ 500.00 க்கு விற்கப்பட வேண்டும் என்று நிர்ணய விலை உள்ள நிலையில் குறித்த வர்த்தகர்கள் 650.00 க்கு விற்பனை செய்ததாகவும் இதனை விசாரிக்கச் சென்ற வியாபாரிகள் கடமையை செய்வதற்கு இடைஞ்சலாக வார்த்தைப் பிரயோகங்கள் செய்ததாகவும் இவ்வாறு கூடிய விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்வழக்கு எதிர்வரும் 25.06.2020 வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் பொருட்கள் கொள்வனவில் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் எனது தொலைபேசி இலக்கமான 077011096 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் மேலும் தெரிவித்தார். (150).

Related posts

75 கிலோ ஹெரோயின் சிக்கியது; எழுவர் கைது!

Tharani

ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பாடசாலைகள் முடக்கம்!

G. Pragas

கொரோனா விவகாரம்; மட்டுவில் உள்ளிருப்பு போராட்டத்துக்கு அழைப்பு!

G. Pragas