செய்திகள் பிரதான செய்தி

அதியுட்ச அதிகாரப்பகிர்வு வழங்கப்படும்! – சஜித் உறுதி!

ஒருமித்த நாட்டுக்களுள் உச்ச அதிகாரப் பகிர்வு! சஜித் அறிவிப்பு!

“ஒருமித்த நாட்டுக்குள் அதியுட்ச அதிகாரப்பகிர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்ட நிலையில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

மேலும்,

தனது அரசியல் வரலாற்றில் ஒருபோதும், நிபந்தனை அரசியலில் ஈடுபட்டதில்லை. நிபந்தனைகளை முன்வைப்பதும் ஏற்றுக்கொள்வதும் இல்லை.

புதிய நாடொன்றை கட்டியெழுப்பும் எனது பயணத்தில் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பேதங்கள் பாராது ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மனிதத்துவத்துக்கு முதலிடம் கொடுக்கும் யுகமொன்றை உருவாக்க நான் எதிர்பார்த்துள்ளேன். – என்றார்.

Related posts

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.30,000 கடனுதவி

Tharani

தங்காலை சுற்றுலா ஹோட்டலை மூட நடவடிக்கை!

Tharani

மனைவி – மகளை காென்று; தானும் தற்கொலை!

reka sivalingam