செய்திகள் பிந்திய செய்திகள்

அதிரடி சுற்றிவளைப்பு – போதைப் பொருளுடன் 100 பேர் கைது!

தெஹிவளையில் பேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 100 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை கடற்கரை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன் தினம் (02) இரவு ஒன்றுகூடிய இளைஞர்கள், யுவதிகள் போதைப்பொருளை பாவித்து களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், குறித்த இடத்திற்கு விரைந்து அங்கு சோதனை மேற்கொண்டதில், போதைப்பொருள் மீட்கப்பட்டது.

இதனையடுத்து களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த 17 பெண்கள் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஈஸ்டர் தாக்குதல்; டுபாயில் சிறை தண்டனை பெற்ற மூவர் விடுதலை

reka sivalingam

கொழும்பு செல்லும் வாகனச்சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

reka sivalingam

சுற்றாடல் பொலிஸ் பிரிவுக்கு மோட்டார் சைக்கிள்கள்

Tharani