செய்திகள் பிரதான செய்தி

அதிர்ச்சித் தகவல்; ஒரேநாளில் 96 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (26) இதுவரை 96 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,278 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கண்டறியப்பட்டவர்களில் 88 பேர் குவைத்தில் இருந்து அழைத்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பதும் 8 பேர் கடற்படையினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஒரேநாளில் அதிக எண்ணினகயானோர் கண்டறியப்பட்ட முதல் சந்தர்ப்பம் இது என்து குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 556 ஆக காணப்படுகிறது.

இதேவேளை இதுவரை 712 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய நாள் இராசிபலன்கள் (20/12) – உங்களுக்கு எப்படி?

Bavan

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இலங்கையின் மெதில்டா கார்ல்சன்

Tharani

தாக்குதலுக்கு சென்ற ஏழுபேர் கைது!

G. Pragas