செய்திகள் பிரதான செய்தி

அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவர அனுமதி!

கொழும்பு உடாபட வெளி மாவட்டங்களில் இருந்து அத்தியாவசிய உணவு பொருள்களை ஏற்றி வரவும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு உள்ளூர் உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்லவும் வாகனங்களுக்கு வழி அனுமதி வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

எனவே சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் சாரதி மற்றும் உதவியாளரின் பெயர்களைப் பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுள்ளார். செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மேலும் வாகனத்தின் சாரதி, உதவியாளரது பெயர், தேசிய அடையாள அட்டை, வாகன இலக்கம், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு எடுத்து வருகின்ற பொருள்கள் ஆகிய விவரத்துடன் உரிய பிரதேச செயலரது பரிந்துரையைப் பெற்று அலுவலக நாள்களில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை மாவட்டச் செயலகத்தின் பரிந்துரையைப் பெற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாணம் இராணுவ சிவில் பாதுகாப்பு அதிகாரியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் – என தெரிவித்துள்ளார்.

Related posts

விமான விபத்து: பலியானவர்களின் பிரேத பரிசோதனை இன்று

Tharani

வெற்றி வீரர்களை மின்சார கதிரையில் இருந்து காப்பாற்றியது ரணில்!

G. Pragas

நுவரெலியா வீதிகளில் பனிமூட்டம்

reka sivalingam

Leave a Comment