செய்திகள் பிரதான செய்தி

அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு? பிரதமரின் அறிவிப்பு

உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பவற்றை தட்டுப்பாடுகள் இன்றி சந்தையில் கிடைப்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, இதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பிரதமரின் செயலாளர் காமினி செரனத்துக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியவசிய பொருட்களை சந்தைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சதோச நிறுவனம், தனது பிரதான களஞ்சியாலைகளிலிருந்து உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

யாழ்ப்பாணம் விமான நிலையப் பகுதியில் வெள்ளம்

G. Pragas

சந்திரிக்காவுக்கு அழைப்பு விடுக்கும் சுதந்திரக் கட்சி!

Tharani

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவருக்கு பொது இடத்தில் தூக்கு

Tharani

Leave a Comment