செய்திகள் பிரதான செய்தி

அத்தியாவசிய பொருட் கொள்வனவில் மக்கள் தீவிரம்

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் ஊரடங்குச் சட்டம் இன்று (20) தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பொருட்களை வாங்கி சென்றுள்ளனர்.

கொரோனோ வைரஸ் தொற்று அச்சம் காரணமாக யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக தொடர் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் இன்று தொடக்கம் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று காலை முதல் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக வர்த்தக நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று பொருட்களை வாங்கிச் சென்றிருந்தனர். அதே போல வங்கிகள் மருந்தகங்களிலும் வரிசை வரிசையாக பெருமளவிலான மக்கள் நின்றிருந்தனர்.

Related posts

இன்றைய கார்டூன்கள் சில

G. Pragas

ஊடகத்தை அச்சுறுத்துவது கண்டனத்துக்குரியது சி.வி.கே

G. Pragas

எதிர்க்கட்சிக்கு தாவிய ஆளுங்கட்சி எம்பி

கதிர்