அத்தியாவசிய பொருளாக பிஸ்கட்?

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் கீழ் அத்தியாவசிய பொருள்களின் பட்டியலில் பிஸ்கட்களை ஒரு அங்கமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகளுடன் நேற்று (10) கலந்துரையாடலிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்

சிமெந்து, இரும்பு, கம்பிகள், கோழியிறைச்சி , முட்டை மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு வர்த்தக அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

கடந்த ஜூலை முதலாம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த கணக்கு முறையின் மூலம் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் 10 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிஸ்கட் விலை அதிகரிப்பு குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அதன்படி நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் கீழ் பிஸ்கட்களை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் ஒரு அங்கமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Exit mobile version