செய்திகள்பிரதான செய்தி

அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு ஆராய புதிய குழு – ரணில் அதிரடி

நாட்டில் நிலவும் அத்தியாவசியப் பொருள்களின் பற்றாக்குறையை உடனடியாகக் குறைப்பதற்கும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் நடவடிக்கைகளை முன்மொழிவதற்கு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய பொருள்களை தட்டுப்பாடின்றி வழங்குவது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் உரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்பான பிரச்சினைகளை ஆராய ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளுடன் தேவையான கலந்துரையாடல்களை நடத்தி பிரச்சினைகளைக் கண்டறிவதோடு, பிரதமருக்கு அனுப்பும் அறிக்கையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு தீர்வுகளையும் வழங்கவுள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,940