செய்திகள் பிரதான செய்தி வவுனியா

அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கு ‘ஊரடங்கு பாஸ்’ அவசியமில்லை!

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கு ஊரடங்கு சட்ட அனுமதி (பாஸ்) பத்திரம் தேவையில்லை என்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார்.

இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

ஊரடங்கு சட்ட காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை விநியோகம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் ஊரடங்கு அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ள தேவையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இச்சேவையில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய வாகனத்திலே அத்தியாவசிய சேவை என மூன்று மொழிகளிலும் எழுதி சுகாதாரப் பிரிவு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்கு அமைவாக பொருட்களை விநியோகிக்க முடியும்.

அத்தோடு சமுர்த்தி பயனாளிகள் ஆறுமாதத்திற்கு பின்னர் செலுத்தக்கூடிய வகையிலே பத்தாயிரம் ரூபாயினை வட்டியின்றிய கடனாக சமுர்த்தி வங்கிகளில் பெற்றுக்கொள்ள முடியும். வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து கடனை இரண்டு கட்டமாக வழங்குவதற்கு வவுனியா மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related posts

பண்பாட்டு பெரு விழாவும் விருது வழங்கலும்

G. Pragas

மருத்துவ சான்றிதழை பெற இணையம் மூலம் பதிவு

reka sivalingam

நம்பிக்கை தரும் செய்தி; நான்கு மாதக் குழந்தை குணமடைந்தது!

G. Pragas