செய்திகள் பிராதான செய்தி

அநுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் – சில அம்சங்கள்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26) காலை வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இன்று அக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

அவற்றின் சில அம்சங்கள்,

  • நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திட்டம் 5 ஆண்டுகளில் நிறுத்தப்படும்.
  • மக்களின் வரிப்பணத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அவர்களது பாரியார்களுக்கும் வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் நிறுத்தப்படும்.
  • அமைச்சரவை 30 ஆக மட்டுப்படுத்தப்படும் (அமைச்சர்கள் 30, பிரதி அமைச்சர்கள் 30)
    இராஜாங்க மற்றும் அமைச்சரவை.
  • அந்தஸ்து அற்ற அமைச்சுக்கள் இரத்து.
  • நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வாகனத்தை பெற்றுக்கொள்வதற்கான சலுகைகள் இல்லாம செய்யப்படும்.
  • ஜனாதிபதி தேவைக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி 90 விகிதமாக குறைக்கப்படும்.
  • நாடு முழுவதும் காணப்படும் ஜனாதிபதி மாளிகைகள் சுற்றுலா ஹோட்டல்கள், கலாச்சார மையங்கள் மற்றும் நூலகங்களாக மாற்றப்படும்.
  • திருடப்பட்ட அனைத்து பொதுச் சொத்துக்களும் மக்களின் நலன்களுக்காக மீட்கப்படும்.
  • நாட்டில் எந்தவொரு தீவிரவாதமும் உருவாக அனுமதிக்க மாட்டோம்.

Related posts

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை! கோத்தாபய

G. Pragas

சஜித் இனவாதி அல்ல – ரிஷாட்

G. Pragas

கோத்தாவை தோற்கடிக்க சஜித் பக்கம் ஆதரவை மாற்றிய கட்சி

G. Pragas

Leave a Comment