in , ,

அந்நிய செலவணி நெருக்கடி; பங்களாதேஷ் மற்றும் இலங்கை நாணய இடமாற்றம்!

பங்களாதேஷின் மத்திய வங்கி இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாணய இடமாற்று வசதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, பங்களாதேஷ் மத்திய வங்கியானது இலங்கையுடனான 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாணய இடமாற்று ஒப்பந்தத்திற்கு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது.

இது இலங்கைக்கு அதன் அந்நிய செலாவணி நெருக்கடியை தவிர்க்க உதவும் என்று பங்களாதேஷ் ஊடகமொன்று அந்நாட்டின் மத்திய வங்கியின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு 4.05 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனாக திருப்பிச் செலுத்தும் அட்டவணையை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு, அந்நிய செலாவணி வருவாய் அவசரமாக தேவைப்படுகிறது. மார்ச் மாதத்தில் அதன் சொந்த அந்நிய செலாவணி இருப்பு 4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

பங்களாதேஷ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வசதியை செயல்படுத்த இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தத்தை முறைப்படுத்த வேண்டும்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் கோரியதை அடுத்து இந்த வசதியை நீடிக்க டாக்கா முடிவு செய்தது என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மேலும் 2,039 பேருக்கு கொவிட்

இலங்கைக்கு ஆறுதல் வெற்றி