கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி மன்னார் முல்லைத்தீவு

அனர்த்த மீட்பு தோணிக்கு நடந்தது என்ன?

எமது பிரதேசத்தில் ஏற்படும் திடீர் அனர்த்தங்களின் போது மக்கள் மீட்புப்பணிக்காகப் பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட அனர்த்த மீட்பு தோணிக்கும் இயந்திரத்திற்கும் என்ன நடந்ததென கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உதவித்தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது பிரதேசத்தில் ஏற்படும் திடீர் அனர்த்தங்களின் போது பயன்படுத்தவென கடந்த 2010ம் ஆண்டு வழங்கப்பட்ட தோணியின் மேற்பகுதி மாத்திரம் எமது பிரதேச சபையின் பின்பகுதியில் கவனிப்பாரற்ற நிலையில் போடப்பட்டுள்ள நிலையில், தோணிக்கும் அதில் பொருத்தப்பட்டிருந்த அதி சக்தி வாய்ந்த இயந்திரத்திற்கும் என்ன நடந்தது என்பது தொடர்பில் சபை மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

அத்தோடு, எமது பிரதேசத்தில் பொருத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களினால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும் அதன் அபாயங்கள் தொடர்பிலும் கடந்த அமர்வுகளில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கான பகுப்பாய்வு அறிக்கை கிடைத்ததும் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு என்ன நடந்தது?

மேலும், பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியைக் கருத்திற்கொண்டு கிராம எல்லைகளுக்கப்பால் ஒதுக்கப்பட்ட 15 ஏக்கர் பொது மயானக்காணி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் சபை விளக்கமளிக்க வேண்டும்.

அத்தோடு எமது பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட நிருவாக உத்தியோகத்தர்கள் வெளிமாவட்டங்களில் கடமை புரிந்து வருகின்ற நிலையில், எமது பிரதேசத்தின் நன்மைகருதி நாம் எதிர்நோக்கும் நிருவாக ரீதியான சிக்கல் நிலைகளைக் கருத்திற் கொண்டு அவர்களை ஏன் எமது பிரதேச செயலகங்களுக்கு நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது எனக் கேள்வியெழுப்பியதுடன், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை கட்சி பேதங்களுக்கப்பால் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார். (150)

Related posts

வெடிமருந்துகளுடன் இருவர் கைது

Tharani

ரஜினியின் சர்ச்சைப் பேச்சு குறித்த வழக்கு தள்ளுபடி!

Bavan

அஜித்துக்கும் ஷாலினிக்கும் வேண்டுகோள் விடுத்தார் கஸ்தூரி!

Bavan

Leave a Comment