செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

அனி­யூ­ரிசம் மூளை­நோய்க்கு நவீன முறை­ சிகிச்சை! -– யாழ்.போதனாவில் வெற்றி

அனி­யூ­ர­ிசம் எனப்­ப­டும் மூளை வியாதி மூலம் பாதிப்­ப­டைந்­த­வ­ருக்கு வடக்கு – கிழக்­கில் முதன் முறை­யாக, யாழ். போதனா மருத்­து­வ­ம­னை­யில் சத்­தி­ர­சி­கிச்­சை­யின்றி குரு­திக் குழாய் மூலம் மேற்­கொள்­ளப்­பட்ட சிகிச்சை வெற்­றி­ய­ளித்­துள்­ளது.

மூளை­யு­டன் தொடர்­பு­டைய நரம்­பில், குரு­திக் குழாய் பல­வீ­ன­ம­டை­வ­தன் மூலம் அது வெடித்து குரு­திக் கசிவு ஏற்­பட்டு இறக்­கும் நிலையை உரு­வாக்­கும் நோயே அனி­யூ­ர­ிசம்.
இது­வரை கால­மும் சத்­தி­ர­சி­கிச்சை மூலமே தலை­யின் மேற்­ப­குதி பிரிக்­கப்­பட்டு மூளை­யின் குறித்த குரு­திக் குழா­யைச் சீர்­செய்­யும் சிகிச்சை இடம்­பெற்­று­வந்­தது.

இந்­நி­லை­யில் யாழ்ப்­பா­ணத்தை சேர்ந்த 60 வயது பெண் ஒரு­வர் , மேற்­படி நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார்.அவ­ருக்கு வழ­மை­யாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற சத்­தி­ர­சி­கிச்­சைக்கு மாற்­றீ­டாக ,கால் பகுதி மூலம் குறித்த குரு­திக் குழா­யின் பல­வீ­ன­ம­டைந்த பகு­தியை சீர்­செய்­யும் சிகிச்சை வெற்­றி­க­ர­மாக யாழ். போதனா மருத்­து­வ­ம­னை­யில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யில் மூன்று தட­வை­கள் இந்­தச் சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தா­லும், வடக்கு, கிழக்­கில் முதன்­மு­றை­யாக யாழ். போதனா மருத்­து­வ­ம­னை­யில் இப்­போதே இத்­த­கைய சிகிச்சை வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

யாழ். போதனா மருத்­து­வ­ம­னை­யின் கதி­ரி­யக்­க­வி­யல் நிபு­ணர் அன்­ரன் ஜெயில் தலை­மை­யில் கொழும்­பில் இருந்து வருகை தந்த நிபு­ணர் குழு­வால் இந்­தச் சிகிச்சை வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் நோய்த் தொற்று குறை­வா­ன­தாக இருப்­ப­தோடு, நோயாளி விரை­வில் வழ­மைக்கு திரும்­ப­வும் முடி­யும்.

யாழ். போதனா மருத்­து­வ­ம­னை­யில் குறித்த சிகிச்சை வெற்­றி­பெற்­ற­மைக்கு பல தரப்­பி­ன­ரும் வாழ்த்­துக்­க­ளைத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266