செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

அனைத்து விஞ்ஞாபனங்களையும் பரிசீலித்த பின்னரே ஆதரவு – சி.வி.கே

ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்ட பின்னர்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று வடக்கு மாகாண முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இன்று (26) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும்,

தேர்தல் விஞ்ஞாபனங்களை அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் வெளியிட்ட பின்னர், அவற்றை பரிசீலித்து அதன் பின்னர்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு அறிவிக்கப்படும்

ஒவ்வொரு கட்சிகளும் எமது பிரச்சினைகள் குறித்து குறிப்பிட்டுள்ளவற்றை ஆராய்ந்து அதன் பின்னரே முடிவெடுப்போம். அவ்வாறே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் குறிப்பிட்டார் – என்றார்.

Related posts

தேர்தல் குறித்து மைத்திரிக்கு புலனாய்வு தகவல்: பாெலிஸார் மறுப்பு

G. Pragas

சுந்தர் பிச்சை ஆல்பபெட்டுக்கும் தலைமை நிர்வாக அதிகாரியாகிறார்……

Bavan

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

reka sivalingam