செய்திகள் பிந்திய செய்திகள்

அன்னமே எமது தெரிவு; முடிவை அறிவித்தார் அசாத் சாலி

தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக நேற்று (29) அறிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக அசாத் சாலி தெரிவித்தார். மேலும்,

நாங்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தேசிய ஒற்றுமை முன்னணி விரிவாக ஆலோசனை நடத்தியது. கொலைகாரர்களையும், வெள்ளை வான் கலாச்சாரத்தைத் தொடங்கியவர்களையும் ஆதரிக்க முடியாது என்று நாங்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டோம்.

சிறுபான்மை சமூகங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கூறுவதும் பள்ளிவாசல்களில் வாள்கள் இருப்பதாகவும் மதரஸாக்கள் சோதனை செய்யப்படும் என்று கூறும் மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க முடியாது

எனவே ஒருமனதாக சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு செய்தோம். ஐ.தே.க. தலைவரை சந்தித்து எங்கள் செய்தியை தெரிவித்தோம். எங்கள் ஆதரவாளர்கள் அனைவரும் சஜித் பிரேமதாசாவின் வெற்றிக்காக செயற்படுவார்கள் – என்றார்.

Related posts

பாடசாலையில் தண்டனை வழங்குவதை தடுக்க வருகிறது புதிய சட்டம்

G. Pragas

கனிமொழி உள்ளிட்ட இந்திய எம்.பிக்கள் ரணிலுடன் சந்திப்பு

G. Pragas

யாழ் நூலகத்தை அழித்தது ஐதேக; பிரதமர் முன் – சுமந்திரன்

G. Pragas

Leave a Comment