in , ,

அன்னை பூபதியை அஞ்சலித்த கூட்டமைப்பு; தடையோடு சென்று ஏமாந்த பொலிஸார்!

அமைத்திப்படையாக வந்து அட்டூழியம் புரிந்த இந்திய இராணுவத்தினை வட, கிழக்கிலிருந்து வெளியேறுமாறு கோரி சாகும் வரையில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகி அன்னை பூபதியின் 33ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (19) மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பால் அனுஷ்டிக்கப்பட்டது.

கல்லடி, நாவலடியில் உள்ள சமாதியில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று காலை இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று காலை 6.00 மணியளவில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை தவிசாளர் சர்வானந்தா, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான ஜெயா மற்றும் இராஜேந்திரன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

இதேநேரம் அஞ்சலி நிகழ்வுக்கான நீதிமன்ற தடையோடு காத்தான்குடி பொலிஸார் சென்ற போது அஞ்சலி நிகழ்வு நிறைவடைந்து நிகழ்வுக்கு வந்தவர்கள் சென்றுவிட்டதால், ஏமாற்றமடைந்த பொலிஸார் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

இராணுவத்தினை மோதிவிட்டு தப்பியோரைத்தேட 4 பொலிஸ் குழுக்கள்!

மன்னாரில் சிக்கியது 89 கிலோ கஞ்சா; மூவர் கைது!